புதுச்சேரி முதல்வரிடம் சந்தானம் வைத்த கோரிக்கை!
ADDED : 1431 days ago
டிக்கிலோனா படத்தை அடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார் சந்தானம். அந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டண வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்புக்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் சந்தானம்.