அஜித்தின் வலிமை மூன்றாவது சிங்கிள்!
ADDED : 1385 days ago
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார் .பொங்கலுக்கு வலிமை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் வலிமை படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் சிங்கிள் நாங்க வேற மாதிரி, இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் வெளியானது.
அதையடுத்து இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகும் என ஒரு சோசியல் மீடியாவில் ஒரு ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து வலிமை படத்தின் டீசர், டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகும் என்று அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.