ரவீந்தரநாத் தாகூர் கதையில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!
ADDED : 1431 days ago
1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதன்பிறகு தமிழில் ஜீன்ஸ், பாபா, ராவணன், எந்திரன் என நடித்தவர். தற்போது 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.
இதையடுத்து அவர் ஹிந்தியில் இஷிதா கங்குலி என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப்படத்தின் கதை தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய ‛3 வுமன்' என்ற கதையை தழுவி எடுக்கப்படுகிறது. மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.