உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சத்யா 2-வில் நடிக்கும் ராஜபார்வை நடிகை

சத்யா 2-வில் நடிக்கும் ராஜபார்வை நடிகை

ஜீ தமிழ் சேனலில் விஷ்னு - ஆயிஷா காம்போவில் சத்யா சீசன் 1, 750 எபிசோடுகளை கடந்து வெற்றி பெற்றது. இதனயடுத்து ஆயிஷா டபுள் ஆக்சனில் கலக்கும் சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது புதுவரவாக விஜய் டிவி சீரியல் பிரபலம் ஆர்த்தி ராம் இணைந்துள்ளார்.

விஜய் டிவியில் ராஜபார்வை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்த்தி ராம் நடித்து வந்தார். சமீபத்தில் அந்த சீரியல் நிறைவுற்றது. இதனையடுத்து இவர் நடித்து வரும் மற்றொரு விஜய் டிவி சீரியலான காற்றுக்கென்ன வேலி தொடரும் விரைவில் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆர்த்தி ராம் ஜீ தமிழ் சீரியலில் இணைந்து விட்டார் என சின்னத்திரை வட்டாரங்கள் பேசி வருகின்றன. சத்யா 2 வில் அவரது போர்ஷன்கள் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. இவர் ஜீ தமிழின் புதிய தொடரான பேரண்பு சீரியலிலும் ஏற்கனவே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !