உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வாத்தி'-ஆக மாறிய தனுஷ்

‛வாத்தி'-ஆக மாறிய தனுஷ்

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என பிஸியாக இருந்து வந்த தனுஷ் முதன்முறையாக நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படம் அடுத்தாண்டு துவங்கி உள்ளது. இந்நிலையில் மற்றொரு தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கி உருவாகும் இந்த படத்திற்கு தமிழில் ‛வாத்தி' என பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் ‛சார்' என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் மனைவி சாய் செஜன்யா மற்றும் நாக வம்சி இணைந்து தயாரிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தைத்தான் தன்னுடைய முதல் நேரடி தெலுங்குப் படம் எனக் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். படத்தில் வாத்தியாராக தனுஷ் நடிப்பார் என தெரிகிறது. அதற்கு ஏற்பட்ட தலைப்பு அமைந்திருப்பதோடு பட தலைப்பு போஸ்டரும் வகுப்பறை எழுத்து பலகை, மாணவர்கள் கவனிப்பது மாதிரியான காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !