உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.200 கோடி வசூலைக் கடந்த 'புஷ்பா'

ரூ.200 கோடி வசூலைக் கடந்த 'புஷ்பா'

சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.

விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் படம் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்த படம் ஐந்து நாட்களில் ரூ.200 கோடியைத் தாண்டி விட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ஸ்பைடர்மேன்' படம் இப்படத்திற்குக் கடுமையான போட்டியை தெலுங்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் ஏற்படுத்தியது. அதையும் மீறி இப்படம் வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ரூ.15 கோடி, கர்நாடகத்தில் ரூ.16 கோடி, கேரளாவில் ரூ.8 கோடி, வட இந்தியாவில் ரூ.25 கோடி, அமெரிக்காவில் ரூ.15 கோடி, தெலுங்கு மாநிலங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

இந்த முதல் பாகத்திற்குக் கிடைத்த வெற்றி, அடுத்தாண்டு கடைசியில் வெளிவர உள்ள இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !