ஸ்டைலான மிரட்டல் லுக்கில் சேரன்
ADDED : 1395 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இயக்குனர் சேரன் நடிப்பில் பிஸியாகிவிட்டார். இவர் நடித்துள்ள ‛ஆனந்தம் விளையாடும் வீடு' நாளை(டிச.,24) வெளியாகிறது. குடும்ப சென்டிமென்ட் கலந்த கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. இதையடுத்து, ‛தமிழ்க்குடிமகன்' என்ற படத்தில் நடிக்கிறார். கடந்தவாரம் தான் இப்பட அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படம் தொடர்பான போட்டோ ஷூட் வெளியாகி உள்ளது. நீண்ட தாடி, தலைமுடியுடன் ஸ்டைலான குடும்பி, பைப்பர் புகை என ஸ்டைலாக மிரட்டல் லுக்கில் உள்ளார் சேரன். விரைவில் படம் பற்றிய மற்ற விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.