‛சுந்தரபாண்டியன்' இயக்குனரின் வெப்சீரிஸ் ஆரம்பம்
ADDED : 1395 days ago
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். நடிகர் சசிகுமாரை வைத்து மீண்டும் இவர் இயக்கி உள்ள கொம்புவச்ச சிங்கம்டா படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் கலையரசன், வாணி போஜன், லகுபரன், அர்ஜய், டேனியல் போப், நடிகை விஜி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.