உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமுத்திரகனி - கதிர் நடிக்கும் ‛தலைக்கூத்தல்'

சமுத்திரகனி - கதிர் நடிக்கும் ‛தலைக்கூத்தல்'

வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி. இவர் நடித்துள்ள ‛ரைட்டர்' படம் நாளை(டிச., 24) வெளியாக உள்ளது. இந்நிலையில் அடுத்து ‛தலைக்கூத்தல்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கதிர், வசுந்தரா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜெய பிரகாஷ் இயக்க, ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

வீட்டுக்கு பாரமாக இருக்கும் முதியவர்களை தலைக்கு குளிக்க வைத்து சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யும் முறையை ‛தலைக்கூத்தல்' என்று கூறுவார்கள். படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பதால் இந்த படம் அது சம்பந்தமான கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !