சூர்யா படம் : டப்பிங்கை முடித்த வினய்
ADDED : 1381 days ago
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் வில்லனாக நடித்தவர் வினய் . அந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யா, வினய்யுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராதிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள், டி இமான் இசையமைத்திருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் வினய், எதற்கும் துணிந்தவன் படத்தில் தனக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் பாண்டிராஜூடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் வினய்.