இயக்குனர் சுராஜ்-க்கு கொரோனா பாதிப்பு
ADDED : 1381 days ago
நாய் சேகர் ரிடர்ன்ஸ் பட இயக்குனர் சுராஜ்- கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. பாடல் தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றனர்.
அங்கு படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், தற்போது இயக்குனர் சுராஜ்க்கும் கொரோனா உறுதியானதை அடுத்து படக்குழுவினருடன் லண்டன் சென்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.