மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1377 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1377 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1377 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1377 days ago
சின்னத்திரையில் இன்று பிசியான நடிகராக வலம் வருகிறார் வீஜே கதிர். கோயில் விழாக்களில் சாதாரண நடன கலைஞராக நடனமாடிக் கொண்டிருந்த அவர் இன்று அதே மேடைகளை சிறப்பு விருந்தினராக அலங்கரித்து வருகிறார்.
வீஜே கதிர், முதன்முதலில் லோக்கல் சேனலில் தொகுப்பாளர். அதன்பின் ஜீ தமிழில் நுழைந்தார். இன்று சின்னத்திரை ரசிகர்களிடம் நல்லதொரு அங்கீகாரம் பெற்ற நடிகராக வலம்வரும் கதிர், செம்பருத்தி சீரியலில் இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார். மேலும், ஜில் ஜங் ஜக், மாஸ்டர் தி பிளாஸ்டர் உள்ளிட்ட பண்டிகை கால ஸ்பெஷல் நிகழ்ச்சிகளையும் ஜீ தமிழுக்காக தொகுத்து வழங்கி வருகிறார். அலட்டிக்காமல் எண்டர்டெய்ன் செய்வதால் இன்று பல ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?
வீஜே கதிரின் அப்பா ஒரு லாரி டிரைவர், அம்மா கட்டிட தொழிலாளி. கதிரின் அப்பா, தனது மகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் போஸ்டர்களை தனது லாரியில் ஒட்டி வைத்து மற்றவர்களிடம் பெருமையாக பேசுவாராம். அவருடைய அனைத்து முயற்சிகளுக்கும் அவரது குடும்பம் உறுதுணையாக இருந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் 'பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர்' விருதை செம்பருத்தி தொடருக்காக வாங்கிய போது அதை தனது அம்மாவிற்காக சமர்பித்தார் கதிர். தனது பேமிலியை பற்றி பேசினாலே எமோஷ்னல் ஆகும் கதிர், தனது குடும்பத்தையே இன்ஸ்பிரேஷனாக நினைத்து தான் இன்று இந்த உயரத்தை தொட்டுள்ளார். இதை அவர் பல மேடைகளில் கூறியுள்ளார்.
கதிருக்கு வெள்ளித்திரை வாய்ப்பும் கிடைத்து. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருடன் கதிர் நடிப்பதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத பெர்சனல் காரணங்களால் அந்த வாய்ப்பு பறிபோனது. ஆனால், கண்டிப்பாக அவர் வெள்ளித்திரையில் தடம் பதிப்பார் என ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1377 days ago
1377 days ago
1377 days ago
1377 days ago