மீண்டும் நாயகனாக நடிக்கும் மோகன்
ADDED : 1392 days ago
1980-90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். இவர் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட சில படங்கள் வருடக்கணக்கில் ஓடின. ஆனால் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மோகன் ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அன்புள்ள காதலுக்கு ஒரு படத்தை இயக்கி, நடித்தார் . அந்த படமும் தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் 2008ஆம் ஆண்டு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழில் ஹீரோவாக ஒரு படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மோகன். சில்வர் ஜூப்ளி ஸ்டார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தாதா 87, பவுடர் போன்ற படங்களை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார் .