பிக்பாஸினால் எந்த பயனும் கிடையாது : சனம் ஷெட்டி ஓப்பன் டாக்!
தமிழ் சினிமா நடிகையான சனம் ஷெட்டி, இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அவர் அதன் மூலம் ஓரளவு சோஷியல் மீடியாக்களில் பேசப்பட்டார். 25 படங்கள் நடித்தும் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே புலம்பியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் நடித்த படம் ஒன்று தற்போது தான் வெளியாகவுள்ளது. அதற்கான புரோமோஷனல் பணிகளில் சனம் ஷெட்டி சமீபத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியால் உங்களுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என நிரூபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, 'என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் தான் சொல்ல முடியும் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததால் எனக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்' என்று கூறியுள்ளார்.