பிக்பாஸ் அக்ஷராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
ADDED : 1409 days ago
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரான அக்ஷரா ரெட்டி, நிகழ்ச்சியில் சூப்பராக விளையாடி வந்தார். இருப்பினும் அவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். தொழில்முறை மாடலான இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
பள்ளி படிக்கும் போதே மாடலிங் மேல் ஆர்வம் கொண்ட அக்ஷரா, கல்லூரி முடித்தவுன் 20 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்துவிட்டார். இதுவரை 150 ராம்ப் வாக் மேடைகளில் கலந்து கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஆந்திர அழகி பட்டமும், 2019 ஆம் ஆண்டில் மிஸ் க்ளோப்-வேர்ல்டு பட்டமும் வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வில்லா டூ வில்லேஜ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.