உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருக்கு லிப்லாக் - படம் வெளியிட்ட ஸ்ரேயா

கணவருக்கு லிப்லாக் - படம் வெளியிட்ட ஸ்ரேயா

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் தெலுங்கில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

பெண் குழந்தைக்கு தாயான ஸ்ரேயா தொடர்ந்து சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். ஸ்ரேயா தற்போது தன் கணவருடன் நேரம் செலவிட்டு வருகிறார். ஸ்ரேயா கணவர் ஆண்ட்ரூவிற்கு நெருக்கமாக லிப்லாக் முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !