மாறுவேடத்தில் சென்று படம் பார்த்த சாய்பல்லவி
ADDED : 1377 days ago
நானியுடன் இணைந்து சாய்பல்லவி நடித்து கடந்த 24ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஷ்யாம் சிங்கா ராய். ராகுல் சங்ரித்யன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் தெலுங்கில் தயாரான போதும் தமிழ், மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதோடு தெலுங்கில் 5 நாட்களில் 24 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஷ்யாம் சிங்கா ராய் படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் புர்கா அணிந்த நிலையில் அப்பட டைரக்டர் ராகுல் சங்ரித்யனுடன் அமர்ந்து கண்டுகளித்திருக்கிறார் சாய்பல்லவி. இப்படி தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து சாய்பல்லவி தான் நடித்த படத்தை பார்த்து ரசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.