உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் 50 வது படத்தை இயக்கும் சுதா கொங்கரா?

சிம்புவின் 50 வது படத்தை இயக்கும் சுதா கொங்கரா?

சிம்பு நடிப்பில் நீண்ட காலம் கழித்து வெளியாகி நீண்ட காலம் கழித்து அவருக்கு வெற்றியை கொடுத்த படம் மாநாடு. எனவே சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் வேகம் எடுத்துள்ளன. சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கவுதம் கார்த்திக்குடன் பத்து தல படம், அதையடுத்து கொரோனா குமார் படத்தில் கோகுல் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 49 வது படமாக இருக்கும். இந்நிலையில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சிம்புவிடம் ஒரு கதை கூறியுள்ளார். சிம்புவுக்கும் கதை பிடித்து விட்டதாம். கொரோனா குமாருக்குப் பிறகு சிம்புவின் 50-வது படமாக சுதா கொங்கரா படம் அமையும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !