அம்மா ஆகிறார் காஜல் அகர்வால்
ADDED : 1474 days ago
இந்திய சினிமாவின் முன்னனி நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொழிலதிபரான கவுதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான புதிதில் தேனிலவுக்காக உலகத்தை சுற்றிய தம்பதிகள் தற்போது அவரவர் பணியில் பிசியாக இருக்கிறார்கள்.
காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தி அடிக்கடி வெளிவரும், அதனை அவர் மறுப்பார். இந்த நிலையில் காஜல் அம்மா ஆகப்போகும் தகவலை கவுதம் கிச்சலு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். 2022ம் ஆண்டு உங்களை காண்பேன் என்று எழுதி அதற்கு அருகில் கர்ப்பத்தை குறிக்கும் எமோஜியை வெளியிட்டிருக்கிறார். அதிகம் மேக்அக் இல்லாது எளிமையாக இருக்கும் காஜல் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.