தனுஷ் படத்தை ஒரே மாதத்தில் படமாக்கி முடிக்கும் வெங்கி அட்லூரி!
ADDED : 1616 days ago
மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்து வந்த தனுஷ் அதையடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜனவரி 5ம் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கி ஜனவரி இறுதிக்குள் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்தை முடித்ததும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கும் தனுஷ், அந்த படத்தை முடித்ததும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இருமொழிப் படம் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார்.