ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி!
ADDED : 1418 days ago
எனிமி படத்தை அடுத்து விஷால் நடித்துள்ள ‛வீரமே வாகை சூடும்' விரைவில் வெளியாக உள்ளது. அதையடுத்து துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். இப்படியான நிலையில் விஷாலின் 33வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் விஷால்.
இந்த படத்தை விஷால் -ஆர்யா இணைந்து நடித்த எனிமி படத்தை தயாரித்த வினோத் தயாரிக்கிறார். அதோடு இந்த மார்க் ஆண்டனி, பான் இந்தியா படம் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.