ஜன.,3ல் வெந்து தணிந்தது காடு இறுதிக்கட்ட படப்பிடிப்பு
ADDED : 1421 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இத்னானி என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் சித்திக் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நாளை (ஜன-3) முதல் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.
பொதுவாகவே கவுதம் மேனன், சிம்பு ஆகியோரின் படங்கள் பல காரணங்களால் தாமதமாவது வழக்கம் தான். ஆனால் இந்தப்படத்தை விரைந்து முடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவுதம் மேனன். மேலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது மாறிவரும் சூழலை மனதில் கொண்டு இந்த மாதத்திற்குள்ளேயே படத்தை முடித்துவிடும் மும்முரத்தில் இருக்கிறார் கவுதம் மேனன்.