சிவாங்கியை கண்கலங்க வைத்த டெலிவரி பாய்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கிக்கு தற்போது பலரும் ரசிகர்களாக உள்ளனர். சிவாங்கி தற்போது படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது இண்ஸ்டாகிராமை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிவாங்கி தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் ஒரு டெலிவரி பாய்க்கு நடந்த கொடுமையை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'மழை பெய்த ஒருநாள் ஒரு டெலிவரி சாலையோரம் நின்று அழுவதை பார்த்தேன். அவரிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டேன். மழையின் காரணமாக உணவை சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியவில்லை. எனவே, கஸ்டமர் உணவை வாங்க மறுத்ததோடு, உணவுக்கான பில்லையும் தர மறுத்துவிட்டார். அந்த பணம் என்னுடைய சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும். எனக்கு சம்பளமே 10,000 ரூபாய் தான். ஆனால், பில் தொகை 3,500 ரூபாய் என சொல்லி அழுதார். இதுபோல வறுமையிலும் கடினமாக உழைக்கும் நபர்களை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும். மழை போன்ற காலங்களில் உணவு டெலிவராக லேட் ஆனால், 10 நிமிடமோ, 30 நிமிடமோ நாம் பொறுத்துக் கொள்ளலாமே! கொஞ்சம் கருணை காட்டலாமே!' என புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சிவாங்கியின் இந்த சமூகப்பார்வையை நினைத்து அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட டெலிவரி பாய்க்கும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.