உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை சுபா பூஞ்சா திருமணம் : நீண்ட நாள் காதலரை மணந்தார்

நடிகை சுபா பூஞ்சா திருமணம் : நீண்ட நாள் காதலரை மணந்தார்

தமிழில் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் அறிமுகமான மச்சி என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் சுபா பூஞ்சா. அதன்பிறகு திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்ட பழம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் சொந்த ஊருக்கே திரும்பியவர் கன்னட படங்களில் நடித்து வந்தார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் கன்னட தயாரிப்பாளர் சுமந்த் பில்லவா என்பவரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பே அறிவித்தார். கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தவர். கொரோனா பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்பதால் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்.

திருமண படங்களை வெளியிட்டுள்ள சுபா பூஞ்சா இதுகுறித்து கூறியிருப்பதாவது: சுமந்த் பில்லவா உடுப்பியை சேர்ந்தவர். எங்கள் நெருங்கி உறவினர். இருவருமே பெங்களூரில் வசிப்பதால் சொந்த ஊரான உடுப்பியில் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். அதன்படி எளிமையாக நடந்தது. 30 பேர் மட்டுமே விழாவில் கலந்து கொண்டார்கள். விரைவில் பெங்களூருவில் வரவேற்பு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறோம். என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !