உயிர்விடும் வரை மறக்க இயலாது - தங்கர் பச்சான்
ADDED : 1371 days ago
தங்கர்பச்சான் இயக்கிய அழகி படத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்த தங்கர்பச்சான் கூறுகையில், ‛தங்களின் அழகிக்கு 20 வயது. இத்தனை ஆண்டுகள் உருண்டோடியதை நம்பமுடியவில்லை. அழகியின் தாக்கத்தை நினைவுகளை யாரேனும் தினமும் பகிர்கின்றனர். திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்க இயலாது. திரைப்பட வரலாற்றில் அழகி பேசுபொருளானது மக்களால் தான்' எனக் கூறியுள்ளார்.