சீரியல் நடிகர் நவீனுக்கு கிடைத்த புரோமோஷன்! வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்
ADDED : 1379 days ago
விஜய் டிவியின் நீலி, தேன்மொழி ஆகிய சீரியல்களின் மூலம் சின்னத்திரை நடிகராக என்ட்ரி கொடுத்தவர் நவீன் வெற்றி. தற்போது தமிழும் சரஸ்தியும் தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு அவரது காதலி சவும்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
தற்போது நவீன் வெற்றி, கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தான் அப்பா ஆகப்போகும் இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.