ஹர்ஷாலிக்கு அம்பேத்கர் விருது
ADDED : 1368 days ago
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ஹர்ஷாலி மல்கோத்ரா. தற்போது பெரிய பெண்ணாகி நாஷ்டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு மகாராஷ்டிர கவர்னர் ஸ்ரீ பகத் சிங் கோஷ்யாரி அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறார். மும்பை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பஜ்ரங்கி பைஜான்' படத்திற்குப் பிறகு பல படங்கள் வந்தது. ஆனால் அது எதுவும் நான் நடிப்பதற்கு ஏற்ற மாதிரி அமையவில்லை. மேலும் படிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. இப்போது. எனது படிப்பையும் நடிப்பையும் ஒன்றாக நிர்வகிக்கும் திறன் எனக்கு வந்துவிட்டது. அதனால் படிப்பின் காரணமாக எந்த ஒரு நல்ல வேடத்தையும் இனி நிராகரிக்க மாட்டேன். என்கிறார்.