உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேலையணிந்து வெயிலில் பீச்சில் நடைபோட்ட பிரியா வாரியர்

சேலையணிந்து வெயிலில் பீச்சில் நடைபோட்ட பிரியா வாரியர்

பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் பிக்னிக் செல்லுமிடங்களில் உள்ள கடற்கரைகளில் பிகினி உடையுடன் நீச்சலடித்து மகிழ்வது வழக்கம்.. அதே உடையுடன் போஸ் கொடுப்பதும், செல்பி எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு அவற்றை விருந்தாக்குவதையும் கூட தவறாமல் செய்து விடுவார்கள். தனது கண் சிமிட்டல்கள் மூலம், புருவ அழகி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கூட அப்படி செய்து வந்தவர் தான்.

இந்தநிலையில் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என நினைத்தாரோ என்னவோ, தற்போது கொளுத்தும் வெயிலில் அதுவும் கருப்பு நிறத்தில் சேலை அணிந்து கடற்கரையில் ஒய்யார நடை போட்டுள்ளார் பிரியா வாரியர்.. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !