ஜி.வி.பிரகாஷை இசை அசுரனாக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்
ADDED : 1363 days ago
வீரமே வாகை சூடும் படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடிக்கப்போகிறார். இது விஷாலின் 33ஆவது படமாகும். இந்தப்படத்தில் எஸ் .ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். விஷால்-ஆர்யா நடித்த எனிமி படத்தை தயாரிக்க மினி ஸ்டுடியோஸ் வினோத் இந்த மார்க் ஆண்டனி படத்தையும் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது மார்க்ஆண்டனி படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதில், விஷாலின் மார்க் ஆண்டனி இப்படத்துக்கு இசை அசுரன் ஜி.வி. பிரகாஷை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.