சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சி: நாக சைதன்யா
ADDED : 1406 days ago
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் காதல், கல்யாணம், பிரிவு என பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. சில ஆண்டுகள் காதல், நான்கு வருட திருமண வாழ்க்கை என இருந்தவர்கள், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.