மகேசுக்கு ஐந்து நாயகி
ADDED : 1358 days ago
‛அங்காடித் தெரு' புகழ் மகேஷ் நடிக்கும் ‛ஏவாள்' படம், ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் மகேசுக்கு பிரதான நாயகியாக மோக் ஷா உள்பட ஐந்து நாயகியர். பெங்காலி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்துள்ள மோக் ஷா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நீளமான தாடி வைத்தவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மாடல் அழகி பர்சிதா சின்காவும் ஐந்து நாயகியரில் ஒருவராக நடிக்கிறார். ஜித்தேஷ் கருணாகரன் இயக்கியுள்ளார். காதலியின் மரணத்திற்கு பழி வாங்க புறப்படும் நாயகனுக்கு, பில்லி சூனியம், ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகளால் பிரச்னை ஏற்படுகிறது. அதை எப்படி சமாளித்து வெல்கிறான் என்பதே படத்தின் கதை.