பார்வைகள் அல்ல புன்னகை : திருத்திய ஏ.ஆர்.ரகுமான்
ADDED : 1404 days ago
கடந்த 2017ல் இந்தியில் வெளியான மிமி என்கிற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இந்த படத்தில் பரம் சுந்தரி என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. ஸ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடலுக்கு படத்தின் நாயகி கிரீத்தி சனோன் சூப்பராக நடனம் ஆடியிருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் யு-டியூப்பில் தற்போது 500 மில்லியன் பார்வைகளை தாண்டி உள்ளது.
இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட படத்தயாரிப்பு நிறுவனம் “பரம் சுந்தரி பாடலுக்கு இந்த உலகமே ஆடுவதை நிறுத்த முடியவில்லை.. யு-டியூப்பில் 500 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் கடந்துள்ளது” என தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தனர் இதை தனது சமூகவலைதள பக்கத்தில் ஷேர் செய்த ஏ.ஆர்.ரகுமான் 500 மில்லியன் பார்வைகள் அல்ல.. புன்னகைகள்” என திருத்தி உள்ளார்.