மணாலியில் ஹேப்பியாக எஞ்சாய் செய்யும் பவித்ரா ஜனனி
ADDED : 1357 days ago
சின்னத்திரை நடிகையான பவித்ரா ஜனனி, விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். போட்டோஷூட்டிலும் களமிறங்கி கலக்கி வரும் அவர், தனது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ள பவித்ரா அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, என்னுடைய முதல் அனுபவம் என பகிர்ந்துள்ளார். மணாலியில் மகிழ்ச்சியாக இருக்கும் பவித்ராவின் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் 'நீங்க இப்படியே ஹேப்பியா இருக்கனும்' என வாழ்த்தி வருகின்றனர்.
பவித்ரா ஜனனிக்கு சினிமா வாய்ப்பும் கதவை தட்டியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக பவித்ரா அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.