சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்- மூன்றாவது பாடல் வெளியானது
ADDED : 1455 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், வினய், ராஜ்கிரண், சரண்யா, சூரி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 4ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. சும்மா சுர்ருன்னு என்று தொடங்கும் அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார். அர்மான் மாலிக், நிகிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.