ஆந்தாலஜி படத்தில் மம்முட்டி- மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்
ADDED : 1356 days ago
தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அவருடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் எழுதிய ஐந்து சிறுகதைகளில் உருவாகும் ஒரு ஆந்தாலஜி மலையாள படத்தில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படி பிரபலமான நடிகர்கள் இணைந்து நடிப்பதால் பல மொழிகளிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.