உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த தொகுப்பாளினி அஞ்சனா!

சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த தொகுப்பாளினி அஞ்சனா!


சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சில தொகுப்பாளினிகளில் அஞ்சனாவும் ஒருவர். நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணத்துக்கு பிறகு சிலகாலம் மீடியாவை விட்டு விலகி இருந்த அஞ்சனா, மீண்டும் டிவி சேனல்களில் பிஸியாகி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கும் செய்தி வெளியானதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தொகுப்பாளினி அஞ்சனா. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விராட் கோலியின் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வந்தனர். அதையடுத்து அந்த பதிவை டெலிட் செய்துவிட்டு சிவகார்த்தியனுக்கு வாழ்த்து சொல்லி மீண்டும் பதிவு போட்டுள்ளார் அஞ்சனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !