ரவிதேஜாவுக்கு ஜோடியாக 5 நாயகிகள்
ADDED : 1354 days ago
கடந்த வருடம் தெலுங்கில் வெளியான கிராக் படம், அதில் ஹீரோவாக நடித்த ரவிதேஜாவுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது. இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கியுள்ள ரவிதேஜா தற்போது கில்லாடி என்கிற படத்தை ரிலீஸுக்கு தயாராக வைத்துள்ளார்.
இந்தநிலையில் ராவனாசுரன் என்கிற படத்தில் நடிக்கிறார் ரவிதேஜா. இந்தப்படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். தமிழில் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்த அனு இம்மானுவேல் இவர்களில் முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார்.. இவருடன் மேகா ஆகாஷ், பைரா அப்துல்லா, தக்ஷா நகர்கர் மற்றும் பூஜிதா பொன்னாடா என இன்னும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் பூஜையில் இந்த ஐவருமே கலந்துகொண்டது ஆச்சர்யம்.