எதற்கும் துணிந்தவன் : சென்சார், ரன்னிங் டைம் வெளியானது
ADDED : 1459 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இப்படம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.