உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி


பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் பிரபலமானார். தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஆர்.கண்ணன் இயக்கிய 'தள்ளிப் போகாதே' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். தமிழையடுத்து தெலுங்கு, கன்னடத்தில் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அடுத்து தெலுங்கில் ரவுடி பாய்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த பட டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலரை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லிப் லாக் காட்சியில் முதல் முறையாக அனுபமா நடித்துள்ளது தான் அதிர்ச்சிக்கு காரணம். லிப்லாக் மட்டுமல்லாமல் படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளும் இருக்கிறது என்கிறது படக்குழு. இதுவரை நடித்திராத இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்காக அனுபமா இந்த படத்துக்காக 50 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !