உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வொண்டர் உமன் கெட்டப்புக்கு மாறிய யாஷிகா ஆனந்த்!

வொண்டர் உமன் கெட்டப்புக்கு மாறிய யாஷிகா ஆனந்த்!

இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது கடமையை செய், பாம்பாட்டம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதையடுத்து சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தயாராகிவிட்டார். அதோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் யாஷிகா, தற்போது வொண்டர் உமன் கெட்டப்பில் கையில் வாளோடு நிற்பது போன்று ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். புடவை கெட்டப்பில் அவர் எடுத்துள்ள அந்த கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !