ரோஜாவின் இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?
ADDED : 1353 days ago
'ரோஜா' சீரியல் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகியுள்ளது. இதில் நடித்து வரும் ப்ரியங்கா நல்காரி சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், ரோஜா தொடர் அவருக்கு அதிகமான புகழை பெற்று தந்தது. தற்போது அவர் தனது ரோல் மாடல் இவர் தான் என பிரபல நடிகையை குறிப்பிட்டுள்ளார். இண்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், படையப்பா படத்தின் 'சுத்தி சுத்தி வந்தீக' பாடலுக்கு நடனமாடி, செளந்தர்யா காரு தான் எனது ரோல் மாடல் என தெரிவித்துள்ளார்.
90 களில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சவுந்தர்யா, தமிழில் 10 படங்கள் மட்டுமே கதாநாயாகி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சவுந்தர்யாவிற்கு பல லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.