கன்னட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்
ADDED : 1353 days ago
சமீபகாலமாக தெலுங்கில் இருந்து மிகப்பெரிய இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்கும் டிரெண்ட் உருவாகியுள்ள நிலையில், அதிலிருந்து சற்றே விலகி கன்னட திரைபட இயக்குனர் ஒருவரின் டைரக்சனில் தமிழில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கிறார் சந்தானம். கன்னடத்தில் லவ்குரு, ஜூம், ஆரஞ்ச் என வெற்றிப்படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜூ தான் சந்தானத்தின் படத்தை இயக்கவுள்ளார்.
இதுகுறித்த தகவலை இருவருமே தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனது முதல் தமிழ்ப்படத்தில் சந்தானத்தை வைத்து இயக்குவதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார் பிரசாந்த் ராஜ். அவர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி இது தனித்துவமான ரொமாண்டிக் காமெடிப்படமாக இருக்குமாம்.