நடிகையை இரண்டாம் திருமணம் செய்த ஹரிஷ் உத்தமன்
பாண்டியநாடு, தொடரி, றெக்க, கைதி ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் ஹரிஷ் உத்தமன்.. சமீபகாலமாக மலையாள திரையுலகிலும் நுழைந்த இவர் மாயநதி, கல்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மம்முட்டியுடன் பீஷ்ம பருவம் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாள நடிகையான சின்னு குருவிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹரிஷ் உத்தமன்.
கேரளாவில் மாவேலிக்கரையில் உள்ள திருமண பதிவு அலுவலகத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். சின்னு குருவில்லா, பஹத் பாசிலின் நார்த் 24 காதம், லுக்கா சிப்பி உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ளார்..
ஹரிஷ் உத்தமன் கடந்த 2018ல் அம்ரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.. ஆனால் அந்த திருமண பந்தம் ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில் தான் தற்போது சின்னு குருவில்லாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.