மீண்டும் நடிக்க வந்தார் ஆம்னி
ADDED : 1357 days ago
1990களில் முன்னணியில் இருந்த நடிகை ஆம்னி. புதிய காற்று, ஒண்ணும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, முதல் சீதனம், ஆனஸ்ட்ராஜ் , எங்கிருந்தோ வந்தான் படங்களில் நடித்தவர். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.
தற்போது சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார். என்.சந்திரமோகன் ரெட்டி தயாரிப்பில் சலபதிபுல்லா இயக்கும் என்னை மாற்றும் காதலே படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்வ கார்த்திகேயா, ஹிரித்திகா சீனிவாஸ் என்ற புதுமுகங்களுடன் கே.பாக்யராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கல்யாண் போர்லகட்டா ஒளிப்பதிவு செய்கிறார், ரதன் இசை அமைக்கிறார்.