உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் ஸ்ருதிஹாசன்

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் 28ம் தேதி தன் 36வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்தாண்டு சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட உள்ளார். மனநலம் திரைப்படம் ஊடகங்களில் பெண்கள் பேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற பல தலைப்புகளில் சமூக வலைதள பக்கத்தில் வரும் 27 முதல் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்த உள்ளார். இந்த நேரலையில் செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:நேரடி அம ர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே இந்த தலைப்புகளை பற்றி சமூகத்தில் விவாதத்தை துவக்க வேண்டும் என்பது தான். பிறந்தநாளை கொண்டாட பல வழிகள் உள்ளன.என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்துவது தான்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !