‛ஜென்டில்மேன்-2' படத்திற்கு ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்
ADDED : 1352 days ago
பல பிரமாண்ட படங்களை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் அடுத்ததாக ‛ஜென்டில்மேன்-2' படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக குஞ்சுமோன் அறிவித்துள்ளார். பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கீரவாணி, ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் இசையமைத்துள்ளார். ‛ஜென்டில்மேன்-2' படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.