உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நொய்டா திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்ற ஜெய்பீம்

நொய்டா திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்ற ஜெய்பீம்

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கிய படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யா தயாரித்து நடித்திருந்தார். மணிகண்டன, லியோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். போலீஸ் லாக்அப்பில் அடித்து கொல்லப்பட்ட இருளர் பழங்குடியின இன இளைஞரின் கதை. இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இந்த படம் பல விருதுகளை பெற்றது. இந்நிலையில் 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸ் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !