நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட பூமிகா
ADDED : 1350 days ago
தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த யூடர்ன், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடிகை பூமிகா தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே நடித்து வரும் அவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் நீராடும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளவட்ட ரசிகர்கள் தெறிக்க விட்டுள்ளார். 43 வயதில் இன்றைய இளவட்ட நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பூமிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.