உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் விஸ்வாசம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது

அஜித்தின் விஸ்வாசம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது

தமிழில் அஜித் நடித்த வீரம் படம் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் ஆன நிலையில் தற்போது அவர் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். போலா சங்கர் என் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் தமன்னா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை வேடத்திலும் நடிக்கிறார்கள். இதையடுத்து அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடக்கின்றன. இந்தப் படத்தில் நடிப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !