வனஜாவுக்கு இவ்வளவு பெரிய பையனா? - வாயை பிளந்த நெட்டீசன்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் வில்லியாக வனஜா சித்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஊர்வம்பு லெக்ஷ்மி. பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வரும் இவர், சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஊர்வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானதால் அதை அடைமொழியாக கொண்டு அறியப்படுகிறார். அவருக்கு கிட்டத்தட்ட 40 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால், பார்ப்பதற்கு அப்படி தெரியமாட்டார். தனது பிட்னஸ் குறித்த டிப்ஸ்களை தனது யூ-டியூபின் மூலம் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது தனது மகன் மோகனின் பிறந்தநாளை கொண்டாடி கோவிலுக்கு சென்று வந்த புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டீசன்கள் வனஜா சித்திக்கு இவ்வளவு பெரிய பையனா ஆச்சரியத்துடன் கமெண்ட்டுகளில் கேட்டு வருகின்றனர்.